Subscribe:

interesting

நகைச்சுவை நடிப்பில் புகழின் சிகரத்தை தொட்ட என்.எஸ்.கிருஷ்ணன்


தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர், "கலைவாணர்" என்.எஸ்.கிருஷ்ணன். உலகப் புகழ் பெற்று விளங்கிய சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.

பெரும்பாலான நடிகர்களைப்போல, இளமையில் வறுமையை அனுபவித்தவர் கலைவாணர். நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29_ந்தேதி என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தார். தந்தை பெயர் சுடலைமுத்து பிள்ளை. ஏழ்மை காரணமாக, மகனை பள்ளிக்கு அனுப்ப அவரால் முடியவில்லை.

கிருஷ்ணன் அவராகவே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். ஒரு மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் பெரும்பாலும் "பாய்ஸ் கம்பெனி"களே இருந்தன. நாடகத்தில் நடிப்பவர்கள் எல்லாம் சிறுவர்களே. டி.கே.எஸ். சகோதரர்களின் "ஸ்ரீ பாலசண்முகானந்தா சபா" அப்போது புகழ் பெற்று விளங்கியது.

திருவனந்தபுரத்தில் அந்த நாடகக்குழுவினர் நாடகம் நடத்தியபோது, என்.எஸ். கிருஷ்ணன் அதில் சேர்ந்தார். கிருஷ்ணனின் நடிப்பும், பாட்டும் சண்முகத்தை வெகுவாகக் கவர்ந்தன. இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

"மனோகரா" நாடகத்தில் வசந்தன் வேடத்தில் நடித்து வந்தவர் சொல்லிக்கொள்ளாமல் போய்விட, அதில் கிருஷ்ணன் பிரமாதமாக நடித்தார். அது முதல் நகைச்சுவை வேடங்களில் நடிக்கலானார். அதில் புகழ் பெற்றார். நகைச்சுவைக் காட்சிகளைத் தாமே அமைத்து, வசனம் எழுதி நடிக்கும் ஆற்றலையும் பெற்றார். டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று "மேனகா".

துப்பறியும் கதை மன்னர் வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய நாவல் இது. நாடகத்தைப் பார்த்த எம்.சோமசுந்தரமும், எஸ்.கே.மொகிதீனும் (பிற்காலத்தில் ஜுபிடர் அதிபர்கள்) மேனகாவைப் படமாக்க முடிவு செய்தனர். நாடகக்குழு முழுவதையும் சினிமாவுக்காக ரூ.14 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.

மேனகா படத்தின் கதைச் சுருக்கம் வருமாறு:_ வராகசாமி, இளம் வக்கீல். இவருடைய மனைவி மேனகா. வராகசாமியின் சகோதரிகள், மேனகாவை கொடுமைப்படுத்துகிறார்கள். வராகசாமிக்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்வதுடன், மேனகாவை நைனா முகமது என்பவனுக்கு (வில்லன்) 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கு சாமா என்பவன் உதவி செய்கிறான்.

ஏமாற்றப்பட்ட மேனகா, நைனா முகமதுவிடம் இருந்து தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறாள். நைனா முகமதுவின் மனைவி நூர்ஜஹான் அவளைக் காப்பாற்றுகிறாள். மேனகா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறாள்.

அவள் ஒரு நடிகனுடன் ஓடிப்போய்விட்டதாக, வராகசாமியின் சகோதரிகளும், சாமாவும் வதந்தி பரப்புகின்றனர். இதை வராகசாமி நம்பி விடுகிறான். ஒரு நாள் நூர்ஜகானுடன் மேனகா காரில் செல்லும்போது, அதை வராகசாமி பார்த்து விடுகிறான்.

மேனகாவை கொன்று விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பின்தொடர்ந்து செல்கிறான். அப்போது காரில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான். மேனகா, நர்ஸ் வேடத்தில் அவனுக்கு பணிவிடை செய்கிறாள். இறுதியில் உண்மை வெளியாகிறது. வராகசாமியும், மேனகாவும் ஒன்று சேருகிறார்கள். சுடலை முத்து பிள்ளைக்கு குடிப்பழக்கம் உண்டு.

கிருஷ்ணனுக்குக் கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதி, அப்பாவிடம் போய்விடும், குடிப்பதற்காக. சிறுவயதிலேயே கலைவாணர் நாடகங்கள் பார்ப்பார். நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நாடகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நாடகக் கொட்டகைக்குள் சோடா பாட்டில்களை விற்று வந்தார்.

நாடகக் கலையின் உத்திகளைத் தெரிந்து கொண்டார். பம்பாய் ரஞ்சித் ஸ்டூடியோவில் உருவான "மேனகா"வை ராஜா சாண்டோ டைரக்ட் செய்தார். கதாநாயகனாக டி.கே.சண்முகமும், கதாநாயகியாக கே.டி. ருக்மணியும், சாமாவாக என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தனர்.

டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே.முத்துசாமி, பெண் வேடத்தில் (விதவைப் பெண்ணாக) பிரமாதமாக நடித்தார். 1935_ல் வெளிவந்த "மேனகா" பெரும் வெற்றி பெற்றது. தமிழ்த்திரை உலகில் மகத்தான வெற்றி கண்ட முதல் சமூகப் படம் "மேனகா".

No comments:

Post a Comment

Followers

Please put vote