டிசம்பர் 8- தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ்நாட்டில் சாதி கொடுமைகளும், உயர்வு, தாழ்வும் மக்களிடையே படர்ந்திருந்த காலம் 1940.
அப்போது தமிழகம் முழுவதும் இரயில்வே உணவகங்கள் இயங்கி வந்தது. இந்த சேவையை இரண்டு நிறுவனங்கள் தனித்தனியே நடத்தி வந்தது. அவை எஸ்.ஐ.ஆர். (சவுத் இந்தியன் இரயில்வே) நிறுவனமும், எம்.எஸ்.எம். நிறுவனமும் ஆகும். தனித்தனி இயக்கமாக இயங்கினாலும் இரண்டுக்கும் ஒரு ஒற்றுமையுண்டு, அது அப்போது இருந்த முக்கிய பிரச்சனையான பெரியார் எப்போதும் எடுத்துரைக்கும் சாதி உயர்வு, தாழ்வு.
ஒவ்வொரு உணவகத்திற்கும் இரண்டு வாயில்கள் இருக்கும். ஒரு வாயிலில் பிராமனர் என்றும், மற்றொண்டில் மற்றவர்கள் என்றும் பலகை எழுதி தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த காலத்திலெல்லாம் நினைத்தவர்கள் நினைத்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது.
அந்தந்த சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் சாப்பிட வேண்டும். அப்படிதான் இந்த இரண்டு இரயில்வே உணவகங்களும் இயங்கி வந்தது.
பிராமனர் என்ற வாயிலில் அவர்கள் மட்டுமே நுழைய வேண்டும். மற்றவர்கள் என்ற வாயிலில் பிற சாதியினர் நுழையலாம். மனித இனத்தில் அனைவரும் ஒருவர் என்ற கருத்தில் இப்பிரச்கனைக்காக பெரியார் குரல் கொடுத்தார்.
இதையடுத்து இரண்டு வாயில்கள் இருக்கக்கூடாது, அகற்றப்படவேண்டும் என்று போராட்டங்களும், மறியல்களும் நடைப்பெற்றது.
பின்பு பெரியார் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.ஐ.ஆர். மற்றும் எம்.எஸ்.எம். நிறுவனங்களும் உடனடியாக இந்த வேறுபாட்டை நீக்க வேண்டும் என்றும், மனித இன உயர்வு, தாழ்வை ஒழிக்கவேண்டும் என்றும் கூறினார்.
1940, டிசம்பர் 8 ந்தேதி பெரியாரின் கோரிக்கையை ஏற்று எம்.எஸ்.எம். நிறுவனம் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து உணவகங்களிலும் இரண்டு வாயில்களை ஒன்றாக்கியது. இதற்காக தந்தை பெரியார் எம்.எஸ்.எம். நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் எஸ்.ஐ.ஆர். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதற்காக அந்த நிறுவனம் பெரியாருக்கு காரணத்தையும் கூறியது.
அந்த காரணம்: இரு வாயில்களையும் ஒன்றாக்கினால் பிராமனர்கள் யாரும் உணவகத்திற்கு வரமாட்டார்கள். அப்படி நடந்தால் எங்கள் நிறுவனம் பெரிய இழப்பை சந்திக்கும் என்பதாகும்,
இதற்கு பெரியார் கூறியதாவது:-
இரயிலில் பயணிப்பவர்கள்தான் உணவகங்களில் வந்து சாப்பிடுகிறார்கள். அதில் பிராமனர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் மற்ற சாதிக்காரர்களைவிட பிராமனர்கள் குறைவாக உள்ளார்கள். அதிலும் இது போன்ற வேற்றுமையை எண்ணும் பிராமனர்கள் மிகவும் குறைவு.
மேலும் பிராமன ஆச்சாரங்களை முற்றிலுமாக கடைப்பிடிப்பவர்கள் நிச்சயமாக உணவகங்களில் வந்து சாப்பிடமாட்டார்கள். அவர்கள் வீட்டிலேயே உணவை தயார் செய்து கொண்டு வந்துவிடுவார்கள். ஆகையால் உணவகத்திற்கு எந்த இழப்பும் வராது என்று பெரியார் கூறினார்.
1941, மார்ச் 31-ம் நாள் பெரியார் கரூரில் மாநட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு முன்னாள் எஸ்.ஐ.ஆர். நிறுவனமும் பெரியாரின் கோரிக்கையை ஏற்றது. உணவகங்களில் இரு வாயில்கள் அகற்றப்பட்டன. இதற்காக கரூர் மாநாட்டில் பெரியார் எஸ்.ஐ.ஆர். நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
மார்ச். 30, 1940-ம் ஆண்டு தமிழக்தில் உள்ள அனைத்து இரயில்வே உணவகத்திலும் நுழைவாயில்கள் ஒன்றாக்கப்பட்டது. ஆகவே அத்தினத்தை இழிவு ஒழிந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று பெரியார் அம்மாநாட்டில் அறிவித்தார்.
இந்நாள் கொண்டாட பட முக்கிய காரணமாக அமைந்த டிசம்பர் 8ந்தேதியை தமிழ் சமுதாயம் வரலாற்றில் முக்கிய நாளாக ஏற்றுக்கொண்டது.
No comments:
Post a Comment