Subscribe:

interesting

நீதி தேவதையின் கோவில் சுத்தமாகட்டும்


நீதி தேவதையின் கோவில் சுத்தமாகட்டும்

டாக்டர்.வி.நடராஜ், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: இந்திய பார்லிமென்ட் வரலாற்றில், முதல் முறையாக விசாரணைக்காக, பார்லிமென்டில் நிறுத்தப்பட்டு, சாதனை படைத்தவர் தான் கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென். வேலியே, பயிரை மேய்ந்த கதையாக, குற்றம் புரிபவர்களை தண்டிக்கும் நீதிபதியே, குற்றவாளி
கூண்டில் நிறுத்தப்படுவது காலத்தின் கோலம்.

"இவர் நிதியை கையாடல் செய்தவர், நீதி விசாரணைகளில் தவறான தகவல்களை தந்தவர்' என, இவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நம் இந்திய
அரசியல் சாசனப்படி, தவறு செய்யும் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் பதவிகளை பறிக்கும் அதிகாரம் பார்லிமென்டிற்கு மட்டுமே உண்டு.ஊழல்களின் விசுவரூபங்கள், புற்றீசல் போல் வெளிவந்து, அவைகளுக்கு கோர்ட் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், நீதிபதி ஒருவரே, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, பார்லிமென்டில் விசாரிக்கப்படுவது, நம் இந்திய ஜனநாயக தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி.

அன்னா ஹசாரேவின் தார்மீக போராட்டம், இந்திய அரசியல் களத்தை தூய்மைப் படுத்தி, லஞ்ச லாவண்யம் இல்லாததும், ஊழல்கள் அற்றதுமான ஒரு எதிர்காலத்திற்கு வித்திட்டுள்ள வேளையில், சவுமித்ரா சென் போன்றோர், நீதித்துறையில் ஊழல்
களுக்காக அடையாளம் காட்டப்படுவது, அன்னாவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
அதே வேளையில், குற்றப்பின்னணியுடைய சவுமித்ரா சென் எப்படி நீதிபதியானார் என்ற வினாவையும் எழுப்பியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறைகளையும், மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதற்கு, தேசிய நீதித்துறை கமிஷன், ஒரு அமைப்பை உருவாக்கி, நீதிபதிகள் நியமனங்களை, முறையாக கையாளப்படுத்துவதே, எதிர்காலத்தில், சவுமித்ரா போன்ற ஊழல் பேர்வழிகள் நீதி தேவதையின் கோவில்களில், பூசாரிகளாய் நடமாடுவது தடுக்கப்படும்.

தற்கொலைதீர்வல்ல...ஏ.பி.வாசுதேவன், தி.நகர், சென்னையிலிருந்து எழுது
கிறார்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், 19, வயதுடைய செங்கொடி என்ற இளம்பெண், தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்து இறந்திருக்கிறாள். "மக்கள் மன்றம்' என்ற அமைப்பைச் சேர்ந்த இந்த பெண், ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை விடுவிக்கக் கோரி, தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் சில அரசியல்
கட்சியைச் சேர்ந்தவர்களும், திரை உலகத்தினரும் போராடி வருகின்றனர்.

"மரணத்திற்கு இன்னொரு மரணம் தான் தீர்வா?' என்று கேட்டு, போராடி வருகின்றனர்.
சட்டம் பயின்ற மூன்று பெண்களும், பேரறிவாளன் தாயாரும், வைகோவும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களெல்லாம், மரணத்தை தழுவவில்லை; "போராட்டம் மூலமே
தீர்வைக் காண்போம்' என்பதில், உறுதியாக இருந்தனர்.

சட்டப்படியே கூட அவர்கள் தூக்கு மேடையிலிருந்து தப்பி, ஆயுள் தண்டனைக்கு மாற்றப்பட்டால், அதை பார்ப்பதற்கு செங்கொடி இருக்க வேண்டாமா? வாழ்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் கூட, உண்ணா நோன்பைத் தானே தேர்ந்தெடுத்திருக்கிறார்... உயிர்த் தியாகம் பண்ணும் முடிவுக்கு வரவில்லை யே?
மனித உயிர் விலை மதிப்பற்றது என்பதை, எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட உயிரை போக்கிக் கொள்வதால், கண்ட பலன் தான் என்ன!

முதல்வர்நோக்கு சரியே!துரை.பரந்தாமன், கொசப்பேட்டை, வேலூரிலிருந்து எழுதுகிறார்: மத்திய அரசு அமல்படுத்த உத்தேசித்து, சமீபத்தில் அறிவித்த, "கலவர தடுப்பு சட்டம்' எங்கு கலவரம் நடந்தாலும், பெரும்பான்மையினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வழி கோலுகிறது.இந்நிலையில், திருவண்ணாமலையில், 50 ஆண்டு பழமையான ஒரு கோவிலின் மணியோசையும், மந்திர ஒலிகளும் இடையூறு செய்வதாகக் கூறி, கோவில் அகற்றப்பட வேண்டும் எனக் கூறி, மாற்று மதம் சார்ந்த ஒரு மத்திய அரசு டாக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ள தாக செய்தி வெளிவந்துள்ளது. இது, நியாயமானதா? உடனே, மக்களும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், ஒருவேளை மேற்குறிப்பிட்ட மத்திய அரசு சட்டம் கொண்டு வரப்பட்டால், இச்சம்பவத்தில், அதன் நடவடிக்கை யார் மீது? போராடும் மக்கள் மீதா அல்லது போராட்டத்துக்கு காரணமான உணர்வுகளை சீண்டிய, அந்த டாக்டர் மீதா...?இதை யோசிக்கும் போது, மேற்படி சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் தமிழக முதல்வரின் செயல், 100 சதவீதம் சரியென்று தோன்றுகிறது.

நல்ல வேளைஅண்ணாதுரைஇல்லை...அ.சேகர், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க.,வின் முதல் முதல்வராகவும், கட்சியின் உயிர் நாடியாகவும், அன்று இருந்தார் அண்ணாதுரை. அவர், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு, 1967ல் வழிவகுத்து, தி.மு.க.,வை
அரியணையில் அமர்த்தியவர்.அவர், எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், தன் குடும்பத்தினர் யாரையும் கட்சியில் நெருங்க விடாமல், இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பார்லிமென்ட் நடைமுறைகளை மதித்தவர். அண்ணாதுரையின் குடும்பத்தினர், இன்று கடனில் வாழ்ந்து, இறந்து வருவது நாம் அறிந்ததே.

ஆனால், அதன்பின், கருணாநிதி ஆட்சியின் போது தான், கழகத்தில் குடும்ப அரசியல் என்பது உட்புகுந்தது. நாளடைவில், குடும்பமே கழகமாக மாறியது. இன்றைய முதல்வர், சமீபத்தில் தந்த ஒரு புள்ளிவிவரக் கணக்கில், முன்னாள் முதல்வரின் குடும்ப உறுப்
பினர்கள், 365 பேர் என சொல்லப்பட்டிருக்கிறது.நிச்சயம், அத்தனை உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாகத் தான் இருப்பர். அதை விட, இவர்களின், "கைத்தடிகளாக' இருந்த பொட்டு சுரேஷ், மின்னல் கொடி, அட்டாக் பாண்டி, எஸ்.ஆர்.கோபி, குடமுருட்டி சேகர் போன்ற பலர், பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளது எப்படி என்று தெரியவில்லை.

அவர்கள் அனைவருக்கும், ஸ்டாலினும், அழகிரியும், ஒவ்வொரு சிறைக்குச் சென்று, ஆறுதல் கூறிவருவது, அவர்களிடையே எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்பு என்பதை தெளிவாக்குகிறது.நல்லவேளை, அண்ணாதுரை இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால், "ஏன் இந்த கட்சியை ஆரம்பித்தோம்' என, மனம் வருந்தியிருப்பார்.

No comments:

Post a Comment

Followers

Please put vote